ஒரு தசாப்தத்திற்குப் பின் வடக்கு தெற்கு சந்திப்பு!

Saturday, March 31st, 2018

முதன்முறையாக ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் வடக்கு, தெற்கு கொரிய தலைவர்கள் அடுத்த மாதம் 27ஆம் திகதி உச்சிமாநாடொன்றில் சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு இரு நாடுகளின் எல்லையில் உள்ள பான்முன்ஜொம் கிராமத்தில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன் மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோருக்கு இடையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டினை நடத்துவதற்கு சீனா மற்றும் வட தென் கொரிய அதிகாரிகள் கடந்த 80 நாட்களாக ஈடுபட்டதன் விளைவாகவேஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வடகொரிய தலைவர், எதிர்வரும் மே மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பையும் சந்திக்கவிருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: