இத்தாலியில் கடுமையாகும் சட்டங்கள்!

Wednesday, June 12th, 2019

சுற்றுப்புறச் சூழலை அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரோம் நிர்வாகம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாலியின் தலைநகரான ரோமில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு நகர சபையானது சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொது இடங்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் உலாவுவது மற்றும் அன்பின் பாலத்தில் காதல் சின்னத்தை (பூட்டு) பதிவிடுவதற்கு அபராதம் விதித்துள்ளது.

‘ட்ரெவி நீருற்று’ போன்ற முக்கியமான சுற்றுலா தளங்களில் நொறுக்கு தீனிகள் உண்பது மற்றும் பொது நீர்க்குழாய்களில் வாய் வைத்து நீர் அருந்துவது போன்றவற்றிற்கும் தடை விதித்துள்ளது. மேலும் அந்நாட்டு படைத்தலைவனைப் போல் உடையணிந்து புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் செலுத்தும் முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அனுமதி இல்லாமல் நீருற்றுகளில் நனைந்து விளையாடுபவர்களுக்கும், நீச்சல் அடிப்பவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முக்கிய சுற்றுலாத்தளமான ’ஸ்பானிஷ் படிகள்’ இடத்திலும், குழந்தைகளை வைத்து கொண்டு செல்லும் கைவண்டிகள், சக்கரம் பொருத்திய இழுவைப் பெட்டிகள் பயன்படுத்துவதற்கும் வரம்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பொது இடங்களில் குப்பை போடுவது, மற்றவர்களுக்கு இடையூறாக ஒலி எழுப்புவது, நீச்சல் உடையில் இருப்பது போன்றவற்றிற்கு அபராதமும், மீறும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: