பட்டப் பகலில் வாள் வெட்டு – ஆறு பேர் கொண்ட குழு குரும்பசிட்டியில் அட்டகாசம்!

Thursday, September 11th, 2025


……..
குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு ஒன்று குடும்பஸ்தர் மீது இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பலாலி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா தினேஷ்குமார் (வயது 32) பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் மற்றும் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

090

Related posts: