படைவீரர்கள் மீது கை வைக்க யாருக்கும் அனுமதி இல்லை – அமைச்சர் சஜித்!

Thursday, September 21st, 2017

படையினர் மீது கை வைப்பதற்கு யாருக்கும் இடமளிக்கப்படாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் படைவீரர்களை காட்டிக் கொடுக்கின்றது. படைவீரர்களை சொற்ப பணத்திற்கு விற்பனை செய்கின்றனர். படைவீராகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளுடன் அராசாங்கம் கைச்சாத்திடுகின்றது என எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.இந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்று முழுதிலும் பொய்யானவை. எதிர்க்கட்சியினர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது படைவீரர்கள் மீதான நேசத்தினால் அல்ல.மீளவும் அலரி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றிக் கொள்ளும் தீராத மோகத்தினாலாகும்.படைவீரர்கள் மீது கடந்த அரசாங்கம் அன்பு செலுத்தியிருந்தால் 40000 சிவில் பாதுகாப்புப் படையினர் ஏன் நிரந்தரமாக்கவில்லை.ஓய்வூதியம் ஏன் வழங்கப்படவில்லை? சிவில் பாதுகாப்பு படையினரின் உரிமைகள் ஏன் பாதுகாக்கப்படவில்லை? என நான் கேள்வி எழுப்புகின்றேன்.தங்களது சுயலாப அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு போலிப் பிரச்சாரங்கள் செய்கின்றனர்.நல்லாட்சி அரசாங்கமே, 40000 சிவில் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களை நிரந்தரமாக்கியுள்ளதுடன் அவர்களின் உரிமைகளையும் உறுதி செய்துள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related posts: