நெடுநாள் நண்பன் அமரர் சிவகுமாரனின் சகோதரன் பூதவுடலுக்கு செயலாளர் நாயக டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, May 17th, 2026



தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது நெடுநாள் நண்பனான அமரர் சிவகுமாரனின் சகோதரரான
சண்முகநாதன் சக்திகுமாரனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தனது நெடுநாள் நண்பாரான அமரர் சண்முகநாதன் சிவகுமாரனின் தம்பியாரான சண்முகநாதன் சக்திகுமாரன் கடந்த 12.05.2026 ஆம் நாள் காலமானார்.

இந்நிலையில் அமரரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல – 48B, Harmer’s Avenue Wellawatte  இல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் தனது நண்பனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துயதுடன் அமரரது உறவுகளுக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது செயலாளர் நாயகத்தின் சட்ட ஆலோசகர்களில் ஒருவரான சட்டத்தரணி சஞ்சீவன் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் ரகீம் நிக்சன் பபி ஆகியோரும் கலந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

இலங்கையில் 100 அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 21 நெருங்குகின்றது – சுகாத...
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது - அமைச்சர் நாமல்...
நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக மிக மோசமான நிலையில் நாட்டு மக்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ விளங்கிக...