நாட்டில் துப்பாக்கிச் சூடுகள், குற்றச் செயல்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, பொலிஸ் சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 15 பொலிஸ் சிறப்புப் படைக் குழுக்கள் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தறைப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மீன் வர்த்தகர் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
000
Related posts:
சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!
உயர் கல்விற்காக வெளிநாடு செல்வோரின் தடுப்பூசி கோரிக்கைகளை கருத்தில் கொள்ளுங்கள் - பொது சுகாதார பரிச...
கறுப்புப் பணம் பிரச்சினை அல்ல; நாட்டில் பணம் இல்லாததே பிரச்சினை – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!
|
|