உயர் கல்விற்காக வெளிநாடு செல்வோரின் தடுப்பூசி கோரிக்கைகளை கருத்தில் கொள்ளுங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் துறைசார் தரப்பினரிடம் கோரிக்கை!

Monday, September 13th, 2021

வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கும், விசேட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்கும் தடுப்பூசி வழங்க விசேட ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் குறித்த நபர்களுக்கு அவர்கள் பயணம் செய்ய விரும்பும் நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் அச்சங்கத்தின் தலைவரான உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறிப்பிட்ட தடுப்பூசிகளைக் கோரி தற்போது ஏராளமான மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்புவோருக்கு, விசேட காரணங்களுக்காக அல்லது தீவிர நோய்களால் அவதிப்படுவோருக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான எழுத்துப்பூர்வ அனுமதி அல்லது தடுப்பூசி இருப்பு எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை.

எனவே தேவையின் அடிப்படையில் தடுப்பூசியை நிர்வகிப்பது முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.

கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பிரதான மருத்துவமனையையாவது ஒதுக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்!
வாழ்வாதார உழைப்புக்களை இழந்த குடும்பங்களுக்கு மே மாதமும் 5 ஆயிரம் ரூபா நிவாரண உதவி – இன்றுமுதல் நடைம...
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இடைநிறுத்தம் - குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக...