நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!
Friday, October 3rd, 2025
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
காணி ஒன்றை பண்படுத்தல் மேற்கொண்டபோதே குறித்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த தகவல் மானிப்பாய் பொலிசாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிசார் விசேட அதிரடி படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்
இன்றையதினம் (03) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த வெடிபொருட்கள் விசேட அதிரடி படையினரால் அகற்றப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாடங்கள் தெரிவிக்கின்றன
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
000
Related posts:
பாவனையாளர்களின் நலன் கருதி மின்சார சபையின் புதிய அறிமுகம்!
இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு – பெப்ரவரி மாதம் இலங்கை வருகின்றார் தாய்லாந்து பிரதமர் - சுதந்த...
|
|
|


