கணினி தரவு அறிவியல் , மென்பொருள் பொறியியல் துறைகளில் புதிய தொழில்வாய்ப்பு – பத்தாயிரம் மாணவர்களுக்கு சந்தர்ப்பம்!

Wednesday, March 31st, 2021

கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் தொடர்பான புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி அஜித் ஜீ மதுரபெரும 2025 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டு இலட்சம் மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊகவியலாளர் மகாநாட்டில்க கருத்து தெரிவிக்கும்போதே துணை வேந்தர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் – தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்றவாறு கற்கை நெறி திருத்தப்பட்டுள்ளது. இதனை இணைய வழி தொழில் நுட்பத்தின் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இந்த பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இதனை அடுத்த ஜூன் மாதம்முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விண்ணப்பங்களை www.ou.ac.lk/bsehons மற்றும் www.vgc.ac.lk.  என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: