இன்றும் சௌபாக்கிய உற்பத்திக் கிராமத் திட்டம் முன்னெடுப்பு!

Friday, July 2nd, 2021

சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 500 கிராமங்களை “சௌபாக்கியா உற்பத்தி கிராமங்களாக” அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த திட்டத்தில் யாழ்ப்பாணத்திலும் பல கிராமங்கள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வுகள் குறித்த பிரதேசங்களின் துறைசார் அதிகாரிகள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன்.ஸ

இன்நிலையில் இன்றையதினம் கல்வியங்காடு சமுர்த்தி வங்கியில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது பிரதேச செயலாளர், சமூர்த்தி தலைமைய முகாமையாளர் சமுர்த்தி சங்க உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக பொறுப்பாளர் அம்பலம் இரவீந்திரதாசனும் கலந்துகொண்டு உதவித்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கிவைத்திருந்தார்.

முன்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தின் கீழ் கிராமிய தொழிற்துறையை விருத்தி செய்யும் முகமாக “சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்கள்” உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: