நாட்டிற்கு பொருத்தமான சிறந்த பிரஜைகள் ஆரம்ப பாடசாலைகளில் உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்து!

Thursday, November 30th, 2023

நாட்டிற்கு பொருத்தமான சிறந்த பிரஜைகள் ஆரம்ப பாடசாலைகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் – 1956 அம் ஆண்டு சிங்கள மொழி அரச கரும மொழியாக ஆக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்த நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகள் கலவரமாக பல இனக்கலவரங்கள் ஏற்பட்டன.

இவற்றுக்கு காரணம் நாட்டுக்கு ஏற்றபொருத்மான பிரஜைகள் உருவாக்கப்படாமையே. இதனால் தான் உலகத்தை பார்க்க முயலும் சிறு பிள்ளைகள் தமது ஆரம்ப கல்வியை முன்னெடுக்கும் இடமான ஆரம்ப பள்ளிகள், இவர்களை நல்வழியில் அடியெடுத்து வைப்பதற்கான தேவையான வழிகாட்டலுடன் வழி நடத்துவது அவசியம்.

இதில் ஆரம்ப பாடசாலைகளின் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது. அதனால்தான் அவர்கள் அனைவரும் கண்ணியத்துடன் கனிவான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யும் அமைப்பை உருவாக்கி செயல்படுகிறோம்.

இதற்காக புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தனியான பிரிவு வகுக்கப்படும் என்று முன்பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாட்டில் முறைசாரா தொழில் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 60 இலட்சம் பேர் உரிய தொழில் அங்கீகாரம் இல்லாதவர்கள், உரிய தொழில் பாதுகாப்பு இல்லாதவர்கள்.

அதனால் அவர்களுக்கு தொழில் கௌரவத்தை அளிக்கவும், அவர்களின் தொழிலுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுக்கவுமே “கரு சரு” என்ற பொருளில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: