தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் வேண்டாம் – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்து!
Sunday, October 6th, 2024
தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா முன்னதாக முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல், இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாகச் சுத்திகரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட 80,000 மில்லியன் கிலோகிராம் நிறையுடைய எண்ணெய், சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை!
விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இராஜினாமா செய்ய தீர்மானம்!
கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் - வடக்கின் ஆளுந...
|
|
|


