தமிழ் தேசியம் என்று கூறி அம்மணமாக நின்று அரசியல் செய்வோருக்கு சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்த முன்னாள் அமைச்சர் பீரிஸ் – ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி சாட்டை!
Sunday, April 26th, 2026அம்மணாமாக நின்றாலும் அரசியல் செய்வோம் என்று திரியும் எமது தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தமிழ் தேசயத்தை வளர்த்த தந்தை செல்வாவின் 49 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அழைத்து சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்திருக்கின்றார்கள் என குற்றம் சாட்டியுள்ள ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி இனிவருங்காலத்தில் தந்தை செல்வாவின் நினைவு கூரல் நிகழ்வுகளுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் கோட்டபய ராஜபசக்சவும் கூட அழைக்கப்படலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு கூரல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சமஸ்டி தொடர்பில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இவரது அழைப்பு மற்றும் அவரது பேசுபொருளான இருக்கும் சமஸ்டி தொடர்பிலும் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து கருத்துக் கூறுகையிலேயே ஜனநாயக தமிழரசுக் கட்சியின் உபதலைவி விமலேஸ்வரி இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
துந்தை செல்வாவின் நினைவு கூரல் நிகழ்வில் தொடர்ந்தும் பல வருடங்களாக் கலந்துகொண்டு வருகின்றேன். அதேநேரம் தந்தை செல்வாவுக்காக தமதிழ் தரப்பிலுள்ள அனைத்து கட்சியினரும் இதில் கலந்துகொள்வதும் வழக்கம்.
ஆனால் இம்முறை ஒரு வினோதம் நடந்துள்ளது. இந்த நிகழ்வில் இம்முறை முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துகொண்டு சமஸ்டி தொடர்பில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். ஜீ.எல்.பீரிஸை அனைவருக்கும் நன்கு தெரியும். இவர் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாத்தைகளில் அதிகம் கலந்துகொண்ட ஒருவர்.
ஆனால் அத்தனை பேச்சுவார்த்தையையும் வெற்றிகரமாக முடிறியடித்தவரும் இவர்தான. ஒருசமயம் முன்னாள் ஜனநாதிபதி மஹிந்த கூட பேச்சுக்களின் போது சிலவற்றை அனுசரித்து போகலாம் என்று கூறியிருந்த நிலையில் அவ்வாறு செல்லக் கூடாது என்று கூறி விட்டக்கொடுப்பில்லாது சமாதான பேச்சுக்களை குழப்பிய ஒருவர் தான் இன்த ஜீ.எல்.பீரிஸ்.
ஆந்தவகையில் அம்மணாமாக நின்றாலும் அரசியல் செய்வோம் என்று திரியும் எமது அரசியல்வாதிகளுக்கு இவர் இன்று சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுக்க அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவுகூரல் நிகழ்வுக்கு ஸீ.எல்.பீரிஸ் இம்முறை அழைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று 50 ஆவது நிகழ்வுக்கு நான் நினைக்கின்றேன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பயங்கரவாத ஒழிப்பு, வடக்கு கிழக்கு பிரிப்பு, அதனூடாக ஒற்றை ஆட்சியின் அவசியம் தொடர்பில் கருத்துரைக்க அழைப்பார்கள் என்று.
அதையும் கடந்து சிலவேளை 51 ஆவது நினைவு கூரலுக்கு முன்னாள் ஜனாநதிபதி கோட்டபயவை அழைத்து முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் பற்றிய வழிமுறை ஒன்றை பேச வைக்கலாம்.
ஆந்தமாதிரியான நிலைக்கு இவர்களது போக்கு இன்ற அடியெடுத்து வைத்திருக்கின்றது. இப்படியாக எமது இனத்தின் இருப்பு இலக்ககள் எல்லாமே அழிகப்கப்படும் சம்பவங்களே இன்று நடைபெறுகின்றது.
இதேநேரம் இன்றைய கூட்டத்தில் அனைவரும் தமது 9 வாசல்களையும் அடைத்துவிட்டே மௌனிகளாக அமர்ந்திருக்கின்றார்கள். ஏனெனில் சரிபிழைகள் சுட்டிக்காட்டினால் வெளியேற்றப்பட்டுவிடுவோம் என்ற அச்சம் இவர்களை இவ்வாறு பொம்மைகளாக இருத்தி வைத்திருக்கின்றது.
உண்மையில் இன்று தமிழ் தேசியம் என்று கூறும் அரசியல் பரப்பில் இருக்கும் எந்த ஒருவருக்கும் தமிழ் மக்கள் கொடுத்த விலைகள் ஞாபகத்தில் இல்லை. ஏனென்றால் இன்று தமிழ் அரசியல் பரப்பில் இருப்பவர்கள் எவரும் அதில் விலை கொடுக்காதவர்கள். தங்களுடைய பிள்ளைகளை உறவுகளை இழந்த வலி தெரியாதவர்கள். இதனால்தான் மக்களில் உணர்வுகள் அவர்களுக்கு ஞாபகம் வருவதில்லை.
தமிழ் மக்களை எவ்வாறெல்லாம் பிளவுபடுத்தலாம் அவர்களது வரலாறுகளை எல்லாம் எவ்வாறு சிதைவுறுத்தலாம் என்பதையே இலக்காக கொண்மே இந்த அம்மண அரசியல்வாதிகளால் இன்று தமிழ் தேசியம் நகர்த்திச் செல்லப்படுகின்றது.
அதற்கும் ஒரு படி மேலாக தமிழ் தேசியம் என்று பேசியவர்கள் இன்று கூட்டாட்சிக்கு போய்விட்டார்கள். ஏன் இதைத்தானே எங்கள் டக்ளஸ் தேவானந்தா மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூறிவந்திருக்கின்றார்.
அவர் அவ்வாறு கூறியபோதெல்லாம் நீங்கள் நக்கலடித்துக்கொண்டு திரிந்தீர்கள். ஆனால் இன்று அவர் கூறிய இடத்துக்கே சென்றிநிற்கின்றீர்கள்.
இன்று கூட்டாட்சிக்கு சென்றுள்ள நீர்ஙகள் ஒவ்வொரவரும் மத்தியில் கூட்டாட்சி எப்படி மாநிலத்தில் சுயாட்சி எப்படி என்று இன்று நீங்கள் மேற்கொள்ளும் சமஸ்டி சீர்திருத்தம் போன்று ஒரு நிகழ்வை வைத்து அவரை அழைத்து விரிவுரையை எடுத்திருக்கலாம். ஏனெனில் அவர் 30 வருடமாக தனது கொள்கையில் மாறாது நிற்கும் ஒருவரை கொண்டுவந்து நீங்கள் வகுப்பெடுங்கள். ஊங்களுக்கு வகுப்பெடுக்க அவரே சிறந்த தெரிவு ஏனென்றால் நீங்கள் தேசியத்தை எந்தளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்தளவுக்கு கொள்கைகளற்று சீரழித்துவிட்டீர்கள். அதனால்தான கூறுகின்றேன் கொள்கை மாறாத அவரை கொண்டுவந்து வகுப்பெடுத்து கற்றுக்கொள்ளுங்கள் என்று – என்றார்.
000
Related posts:
|
|
|


