அதிபர்கள், ஆசிரியர்களின் சேவைக்கால சம்பள நிலுவைகளை சீர்செய்யாவிட்டால் கல்வி அதிகாரிகளை புறக்கணிக்கத் திட்டம்!

Saturday, December 17th, 2016

வடக்கு மாகாணத்தில் கடமை புரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் தமக்கான வேதன நிலுவைகளைப் பெறமுடியாமல் திண்டாடி வருவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

வழங்கப்பட வேண்டிய நிலுவைப்பணம் கோடிக்கணக்கில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்நிலுவைகளை வழங்குவதற்கு கல்வி வலயங்களில் பணம் இல்லை என்று கைவிரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கடமை செய்த காலங்களுக்கு உரிய வேதனம் கிடைக்கப்பெறாத நிலையில் செய்வதறியாது அதிபர்கள், ஆசிரியர்கள் இருப்பதாகவும் சட்டரீதியாக அணுகுவதற்கும் விருப்பமின்றி காணப்படுகின்றனர். பல அதிபர்கள், ஆசிரியர்கள் ஒய்வு பெற்றும் இதுவரை நிலுவைப் பணத்தை பெறமுடியாதவர்களாக உள்ளனர். இத்தகைய நிலை உடனடியாக சீர் செய்யப்படவி;லை எனில் கல்வித்திணைக்களம் சார்ந்த அதிகாரிகளை பாடசாலைகளில் புறக்கணிப்பது என்ற தீர்மானத்திற்கு வரவுள்ளதாகவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ctta

Related posts: