தனி நபர்கள் விரோதம் குழு மோதலானது – வட்டுக்கோட்டையில் களோபரம்!

……
வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இன்றையதினம் இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றையதினம் தனி நபர்களுடைய தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்றது. பின்னர் இன்று இரண்டு தனிநபர்களது ஊரவர்களும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதன்போது ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோது பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
அத்துடன் ஒரே குழுவை இருவர் கைது செய்யப்பட்டனர். மூளாய் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
டிசம்பரில் உள்ளுராட்சி தேர்தல்கள் இடம்பெற வாய்ப்பு!
சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்...
அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் பலி!
|
|