மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் எந்தவொரு செயலுக்கும் அரசாங்கம் இடமளிக்காது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2024

நாட்டு மக்களின் சாதாரண வாழ்க்கையை சீர்குலைக்கும் எந்தவொரு செயலுக்கும் அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு சிரமங்களுடன் ஒழுங்கமைப்பிற்குள் கொண்டு வந்த பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்வதற்காகவும், தற்போதைய மிகவும் சிரமமான பயணத்தில் அவதானமாகப் பயணிக்கும் நிலையை சீர்குலைப்பதற்காகவும் பல்வேறு சக்திகள் பல்வேறு முறைகளில் அரச நிறுவனங்களில் நடந்து கொள்வதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது வரலாறு முழுவதும் இடம்பெற்றுள்ளதாகவும், எந்தவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும், கலந்துரையாடல், பேச்சுவார்த்தை மற்றும் மாநாடு போன்றவற்றின் ஊடாக இலகுவாக தீர்த்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் வேலைநிறுத்தங்களினால் அதிகமாக அழுத்தத்திற்கு உள்ளாவது சாதாரண பொது மக்களே என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் விபரித்தார்.

அதனால் அவ்வாறு அழுத்தத்திற்கு ஆளாக்காது கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த அமைச்சர், அவ்வாறு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளாது அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுவதாயின் அது தொடர்பாக நிறுவன மட்டத்திலாவது குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் ஊடாக இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

திறக்கப்படாத எஞ்சிய தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் அடுத்தவாரம்முதல் மீள ஆரம்பம் - கல்வி அமைச்சர்...
இலங்கை தனது வெளிவிவகார கொள்கையில் எவரையும் விலக்கிவைத்தது கிடையாது - இந்தியாவுடனான உறவு அனைத்துவகைகள...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எ...