கணக்கீடுகள் முடிந்தவுடன் இறப்பு வீதம் குறையும் – சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!

Tuesday, August 17th, 2021

கொரோனா புள்ளிவிபரங்கள் தொடர்பான கணக்கீடுகளில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடாவ அது முடிந்தவுடன் இறப்பு வீதம் குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.

இறப்பு வீதம் பொதுவாக செயலிலுள்ள தொற்றாளர் களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. உண்மையான புள்ளிவிபரங்கள் பெறப்படும்போது, இறப்பு வீதம் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது மாவட்ட மற்றும் மாகாண பணிப்பாளர் களுடன் ஒருங்கிணைந்து கொவிட் தரவின் அடிப்படை யில் எங்கு தவறு நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து பின்னர், பிரச்சினையை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், கொரோனா தொற்று மற்றும் இறப்பு தொடர்பான புள்ளிவிபரங்களை மறைக்கவோ அல்லது மாற்றவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

சுமார் 1.3 ஆக இருந்த இறப்பு வீதம் இப்போது 6.09 ஆக உள்ளது. இது நாட்டில் கொவிட் -19 சூழ்நிலையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

மக்கள் தொகை வீதத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, இது உலகின் நான்காவது மிக உயர்ந்த தினசரி இறப்பு வீதம் என்றும் கூறப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: