ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி – பரீட்சைத் திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, May 5th, 2021

வெளியான 2020 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுக்கமைவாக பல்கலைக் கழகங்களுக்கு ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 பேர் தகுதி பெற்றிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக ஒரு இலட்சத்து 78 ஆயிரத்து 337 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேவேளை 86 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக பரீட்சைத்திணைக்ககளம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இப்பரீட்சை தொடர்பான விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை திணைக்களத்தின்  ஊடக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளியான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை . பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்தள்ள பரிட்சை திணைக்களம் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் விபரங்களை அறிந்துகொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: