டெல்டா திரிபு தொற்றியவர்கள் ஆயிரக் கணக்கில் இலங்கையில் இருக்கலாம் – சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Wednesday, July 7th, 2021

டெல்டா திரிபு தொற்றிய ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டில் இருக்கக் கூடும் என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில் –

டெல்டா திரிபு தொற்று உறுதியாளர்கள் இல்லை என்று எம்மால் கூற முடியாது. ஒரு நோயாளி கண்டு பிடிக்கப்படுகின்றார் என்றால் அவ்வாறான ஆயிரக்கணக்கானவர்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய சாத்தியம் உண்டு.

தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டது.

இதன் காரணமாக நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியானது பயணத்தடையினால் ஏற்பட்ட அதிகரிப்பாகவோ குறைவாகவோ கருத முடியாது.

நாட்டில் தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகள் 9 ஆயிரம்வரையில் குறைந்ததுள்ளது. மீளவும் நேற்று இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: