ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி – இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கவலை!.
Wednesday, May 14th, 2025
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி விதிக்கப்படுவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா தெரிவித்துள்ளார்.
வட்ட மேசை மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடும் போது ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்றும் அவ்வாறான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படுமாயின் அது இரு நாடுகளுக்குமான நன்மைகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|
|


