A H1 N1 நோய் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை – சுகாதாரத் துறை!

Saturday, January 14th, 2017

இன்புளுவன்சா A H1 N1 நோய் தொடர்பில் வீணாக பீதி ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

எனினும் சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நீண்ட கால நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்த நோய் ஏற்பட்டால் அபாயம் இருப்பதாக கண்டி பொது வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் துஷ்மந்த மெதகெதர தெரிவித்துள்ளார்..

கண்டி பொது வைத்தியசாலையில் சிறுநீரக பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த 03 நோயாளர்கள் அண்மையில் உயிரிழந்திருந்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு இன்புளுவன்சா A H1 N1 நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

எவ்வாறாயினும் தற்போது அந்த நோய் தொற்றைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக கண்டி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்ணாயக்க தெிவித்துள்ளார்.

இதுதவிர இன்புளுவன்சா A H1 N1 நோய் மற்றும் பறவைக் காய்ச்சல் நோய் ஆகியவற்றுக்கிடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று மிருக வைத்திய பிரிவின் கால்நடை வைத்திய அதிகாரி டிகிரி விஜேதிலக கூறினார். இதுவரை இலங்கையில் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் பதிவாகவில்லை என்று நேற்று கண்டியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1799626460Virs

Related posts: