ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம்!

Saturday, December 21st, 2024

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியறுத்தியுள்ளார்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியில், சினுபான்மையின மக்களின் பிரதிநித்துவம் இல்லாமையை சுட்டிக்காட்டி, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகத்தினால் இந்த விடயம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள 18 பேர் அடங்கிய இக்குழுவில் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதிதுவப் படுத்தும் வகையில் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ...
பழிவாங்கும் மனோநிலையில் இருந்து வெளியே வாருங்கள்: காங்கேசன்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
சுயநலவாதுகளின் சதிக்கு இடம் கொடுக்காது நீதியை தரவேண்டும் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டம்!