ட்ரம்ப் இன்று சீனா பயணம்!

Wednesday, May 13th, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (13) சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

சுமார் ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையிலான உறவில் இது ஒரு தீர்மானமிக்க தருணம் என அந்த அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

2025 ஒக்டோபர் மாதம் தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் சந்தித்த பிறகு, அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் விஜயம் இதுவாகும்.

மேலும், 2025 ஜனவரி 20 ஆம் திகதி தனது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தைத் தொடங்கிய பின்னர் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதலாவது சீன விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போர் மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தை சிக்கல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
000

Related posts: