ஜனாதிபதியின் புகைப்படங்களை வெளியிட அரச நிறுவனங்கள் முன் அனுமதி பெற வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர்!
Friday, October 11th, 2024
இனிவரும் நாள்களில் நிகழ்வுகளின் பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச நிதியைப் பெற்று முன்னெடுக்கப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும் போது, அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாகச் செயற்படுவது அவசியமானது எனவும் அரச நிறுவனங்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனச் சபைகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.
00
Related posts:
|
|
|


