இந்திய மீன்பிடி வள்ளங்கள் தொடர்பில் விரைவில் முடிவு – அமைச்சர் அமரவீர!

Friday, April 7th, 2017

இந்திய மீன்பிடி வள்ளங்கள் அத்துமீறல் தொடர்பில் இறுதித்தீர்மானத்தை குழுவின் அடிப்படையில் விரைவில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று நடைபெற்ற மீனவர் சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

வடக்கு மீனவ பிரதிநிதிகள் இந்திய வள்ளங்கள் தொடர்பில் குழு அமைக்கப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சரை கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளிக்கையில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட வள்ளங்களை விடுவிப்பது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த விடயங்கள் தொடர்பில் குழுவின் அறிக்கைக்கு மதிப்பளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது. இந்திய மீனவர்களின் ஊடுருவல், தடை செய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களின் பயன்பாடு, மீனவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி பேசப்பட்டன.

இந்திய மீனவர்களின் பிரச்சினை பற்றி ஆராய மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு நாடுகளையும் சேர்ந்த உயர்அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

Related posts: