சீன அதிபரின் கருத்துக்கு முகத்திற்கு நேராக மறுத்த ட்ரம்ப்!
Saturday, May 16th, 2026ஜி ஜின்பிங் “ஈரான் விவகாரத்தில் நான் உதவுகிறேன்” என்று சொன்னதற்கு, டொனால்ட் ட்ரம்ப் கொடுத்த பதிலடிதான் இப்போது உலக அரசியலில் மிக முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.
இலவசமாக எதுவும் கிடைக்காது. “யாராவது ஒருமுறை உங்களுக்கு உதவி செய்தால், கண்டிப்பாக மறுபக்கம் அவர்கள் ஒரு பெரிய லாபத்தை எதிர்பார்ப்பார்கள்.
அதுதான் உதவி செய்யும் முறை. எங்களுக்கு அந்த உதவி தேவையில்லை என்று Fox News பேட்டியில் ட்ரம்ப் பட்டவர்த்தனமாகப் பேசியுள்ளார்.
இதேநேரம் ஒப்பந்தம் போடுவது மிகக் கடினம். இன்று ஒரு பேச்சு பேசுகிறார்கள், மறுநாள் அதற்கு சம்பந்தமே இல்லாதது போல் நடந்து கொள்கிறார்கள்.
உண்மையில் அவர்கள் பைத்தியக்காரத்தனமாக (Crazy) இருக்கிறார்கள்!” என்று ட்ரம்ப் சாடியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எண்ணெய் வர்த்தகம் தடைபட்டிருப்பது சீனாவைப் பாதித்துள்ளது. எனவே அந்தப் பாதையைத் திறக்க சீனா துடிக்கிறது. ஆனால், அமெரிக்கா இதில் சீனாவுக்கு எந்த ஒரு சலுகையையும் (Favor) வழங்கத் தயாராக இல்லை.
சீனாவின் உதவியைப் பெற்றால், பதிலுக்கு தைவான் விவகாரத்திலோ அல்லது வர்த்தகத்திலோ அவர்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்ய வேண்டியிருக்கும் என்பதை ட்ரம்ப் முன்கூட்டியே கணித்துவிட்டார்.
Related posts:
|
|
|


