சிறுவர்களிடையே  இன்ப்ளூயன்ஸா, டெங்கு  மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Friday, May 16th, 2025

இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த விடுமுறை நாட்களில் சிறுவர்கள் அதிகமாக பயணம் செய்தமை மற்றும் அதிக கொண்டாட்டங்களில் ஈடுபட்டமையே இதற்கு காரணமாகும்.

இந்த வைரஸ் நோய்களில், இன்ப்ளூயன்ஸாவின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை மற்றும் நுளம்புகளின் அதிகரிப்பு காரணமாக பல தொற்று நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிக்குன்குனியாவின் அறிகுறிகளில் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, உடல் வலிகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், மூக்கில் ஏற்படும் கறுப்பு நிற அடையாளம், கைகள் மற்றும் கால்களில் கருப்பு புள்ளிகள் ஆகியவை அடங்கும்.

மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே, அத்தகைய சிறுவர்களை, மாணவர்கள் கூடும் பிற இடங்களுக்கும் அனுப்புவதற்கு முன்பு, அவர்களை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தாமதிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய!
மாவட்ட மூலக்கிளை தெரிவுகளில் நீண்டகால அங்கத்தவர்கள் புறக்கணிப்பு - தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கும...
உரிய முறையில் விசாரணை இல்லையோல் எந்த ஒரு அரச விடுதிகளிலும் தாங்க முடியாது - ரூபினி வரதலிங்கம் காட்டம...