சிறுகச் சிறுக சேகரித்த மக்கள் நிதியை சபை ஆரோக்கியமாக பயன்படுத்துவது அவசியம் – பாதீட்டு உரையில் உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

Wednesday, December 17th, 2025


…….
சிறுகச் சிறுக மக்களுடமிருந்து சேகரித்து சபை வைத்திருக்கும் நிதியை எடுத்து நாம் பரபரபுக் காட்டுவதை விடுத்து, பின்தங்கிய பிரதேசமாக இருக்கும் எமது சபைக்கு விசேட வருமானங்களையும் நிதியையும் உள்வாங்கும் பொறிமுறையையும் திட்டங்களையும் வலுவாக முன்னெடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று (17) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமாரால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் –

சபையின் ஊழியர்களது ஊதியத்தில் 40 வீதத்தை சபைகளே பங்கெடுக்க வேண்டும் என அரசு அறிவித்து நடைமுறையாக்கியுள்ளது.

ஆனால் மக்களின் நிதியை அதற்கு வழங்கும் சபை மாற்றீட்டு வருமானத்தை அல்லது ஈடு செய்ய என்ன புதிய பொறிமுறையை உள்வாங்கியுள்ளது?. என்றால் எதுவும் இல்லை என்றே தோன்றுகின்றது.

இருந்தும் எமது சபை சுமார் 20 வீதமானதையே இம்முறை வழங்கியுள்கது. இதேநேரம் சபையில் இருக்கும் அல்லது மக்களிடம் இருந்து பெறும்  நிதியை தொடர்ந்தும் எடுத்து ஊழியர்களுக்கு வழங்க முடியாது. இது மக்களையும் பிரதேசத்தையும் மேலும் துன்பத்துக்குள்ளாக்கும் ஒன்றாகும்.

அதேனேரம் மாறாக புதிய பொருளாதாரம் ஈட்டும் முயற்சிகளை, முதலீடுகளை சபை முன்னெடுத்திருக்க அல்லது முன்னெடுக்க வேண்டும்.

அல்லது மத்திய அரசிடம் எம்மால் அந்த நிதிப் பங்களிப்பு செய்வது இயலாது. எமது சபை வருமானம் குறைந்த ஒன்று.
எனவே எமக்கு அதை ஈடு செய்யும் வகையில் மாற்றீடான ஒரு நிதி அல்லது வழங்கல் முறைமை வேண்டும்.

அல்லது விசேட நிதி வேண்டும் என நாம் மத்திய அரசுக்கு எமது நிலையை சுடிக்கட்டி பெறுவதற்கு முயற்சிக்க  வேண்டும்.

இதேநேரம் கடந்த காலங்களில் இருந்த அரசுகள் சபைகளுக்கு விசேட நிதி ஒதுகிடு செய்திருந்தன. சபைகள் கோரியும் நிதிகள் பெறப்பட்டிருக்கின்றன.

அவ்வறு இன்றும் கோரிப் பெற முடியும். ஆழும் தரப்பு உறுப்பினர்களும் இந்த சபையில் இருக்கின்றனர்.

இதேநேரம் இன்று வெள்ள நிவாரணம் கொடுப்பதும் தெருக்களையும் காணிகளையும் வெட்டிவிட்டு அதை காட்சிப்படுத்துவதும் மட்டும்தான் நடந்துள்ளது.

இது அபிவிருத்தி அல்ல.
கடந்த காலத்தை சொல்லிச் சொல்லி இன்றைய காலத்தை ஓட்ட இந்த சபை இடங்கொடுக்காது என எண்ணுகின்றேன்.

அத்துடன் பாதீட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக செயற்பாடுகள் இருக்க கூடாது.

ஒத்துழைப்பும் அணுகுமுறைகளும் அனைத்து காலங்களிலும் இருப்பது அவசியம்.

எனவே எமது கட்சி என்றும் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் ஒரு கட்சியாக இருப்பதால் இன்றைய காலச் சூழலில் சபையின் மக்கள் பிரதிநிதிகளது பங்களிப்புக்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி நாம் இந்த பாதீட்டை குறைகள் இருந்தும் அது சீர்செய்யப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கையில் ஆதரிக்கின்றோம் என்றும் தெதிவித்தார்.
00000

Related posts: