நிரந்தர நியமனம் கேட்டு நடத்திய பேச்சுக்கள் தோல்வி –  தொழிலாளர் சங்கம் தெரிவிப்பு!

Friday, November 11th, 2016

யாழ்.மாநகரசபையில் தற்காலிக இணைப்பில் உள்ள சுகாதாரத் தொழிலாளர்களின் நிரந்தர நியமனம் குறித்த பலமுறை மாநகரசபை மற்றும் மாகாணசபை நிர்வாகத்தினருடன் பேச்சக்கள் நடத்தியிருந்தும் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக வடபிராந்திய ஜக்கிய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எம்மில் பல குடும்பத் தலைவர்கள், வயதானவர்கள் ஒட்டுமொத்தப் பணியாளர்களின் நலன்கருதி எமது சங்கம் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. எமது பணியின் மகத்துவம் பொது மக்கள் யாவரும் அறிந்ததே. பொதுமக்கள், வர்த்தகர்கள் அனைவரினதும் சுகாதார நலன் கருதி தெரிந்துகொண்டும் இந்த காலநேரத்தில் புறக்கணிப்பில் ஈடுபடுவது சிலருக்கு தவறாக தெரியலாம். எனினும் நிர்வாகத்தின் அசிரத்தை எவ்வித உத்தரவாதமும் தருவதாக இல்லை. அதனால் தமது போராட்டத்தை தொடர வேண்டிய  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பொதுமக்களின் அசௌகரியத்திற்கு வருந்துகின்றோம். எனினும் எங்கள் நிலை பற்றியும் சிந்திப்பீர்களா? இதில் எவரும் தனிநபர் வருமான நோக்கோடு செயற்பட வேண்டாம் என்பதையும், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எத்தனிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றோம் – என்றுள்ளது.

5761-1-b2816e320724e0c9a2ce6a5e2c0ebcf8

Related posts: