சாவகச்சேரி நகரசபையின் அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Friday, April 10th, 2026


சாவகச்சேரி நகரசபையின் அரசியற் செயற்பாடுகள் குறித்தும் மக்களின் எதிர்பார்புகள் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிவதற்கான  கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் (10)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

ஈ.பி.டி.பியின் சமகால மற்றிம் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் குறித்து  ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று ஆராய்ந்து முன்னகர்வுகளை முன்னெடுத்துவரும் நிலையில், அதன் ஒரு முன்னெடுப்பாகவே இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

கட்சியின் தென்மராட்சி பிரதேச பொறுப்பாளர்கள், நகர மற்றும் பிரதேச  சபைகளின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள்  முக்கியஸ்தர்களுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த கலந்துரையாடலின்போது
சமகால அரசியல் பொருளாதார ரீதியான ஸ்திரமின்மைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன்  நிகழ்கால எதிர்கால கட்சியின் அரசியல் பொறிமுறைகள் முன்னகர்வுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது

Related posts: