சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விவகாரம் –  உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என உதய கம்மன்பில கறுப்புப்பட்டி போராட்டம்! 

Thursday, June 12th, 2025

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பிலான உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என கோரி  பிவிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கறுப்புப்பட்டி போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

சுங்கத்திலிருந்து பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் உண்மைத் தன்மையை கண்டுப்பிடித்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் அவை நிறைவேறும்வரை கறுப்புப் பட்டி அணிந்து போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் திங்கட்கிழமைவாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானதன் பின் அது தொடர்பான முழு விபரத்தையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறு...
ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக ...
மக்கள் விரோதிகளே பொன்னாவெளி குழப்பத்தின் பின்னால் மறை கரமாக இருக்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்ச...