மக்கள் விரோதிகளே பொன்னாவெளி குழப்பத்தின் பின்னால் மறை கரமாக இருக்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, April 9th, 2024

பொன்னாவெளி பிரதேசத்தில் சுண்ணக்கல் அகழ்வதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்களினால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் வெளியிட்டு அப்பிரதேச மக்களின் தேவைகளை மழுங்கடிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்பேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (09.04.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

பொன்னாவெளி பிரதேசம் சுண்ணக்கல் நிறைந்த பிரதேசமாகும். அதனால் அங்கே நிலத்தடி நீர் உவர் நீராக உள்ளது. சுண்ணக்கல் அகழ்வு அங்கே நடைபெற்றால் அந்த இடங்களில் மழை நீரை தேக்கி நிலத்தை பாதுகாக்க முடியும்.

அத்துடன் நன்னீரை சேமிக்கும்போது அந்த நீரை அங்கு விவசாய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும். இவ்வாறு பல நல்ல திட்டங்கள் இதில் உள்ளன.

இதேவேளை  சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிரதேசம் உவர் நீரால் சூழப்பட்டுள்ளதாக  கூறி மக்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கு முக்கியமான காரணமாக குடிநீர் இன்மை அமைகின்றது. அதுமட்டுமல்லாது பயன்தரு மரங்களோ விலங்குகளுக்கான மேச்சல் நிலங்களோ அப்பகுதியில் அருகிவந்தமையால்.  அப்பகுதியை விட்டு மக்கள் வெளியேறிச் சென்றிருந்ததாக கூறுப்படுகின்றது.

அவ்வாறான சூழ்நிலையில் சுண்ணக்கல் அகழ்வதனால்தான நிலம் உவர்நீராக மாறும் என கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

இதேவேளை குறித்த பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த காலத்தில் சுண்ணக்கல் அகழ்வுக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதேபோன்று கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.

அவ்வாறான நிலையில் குறித்த பிரதேசம் சுண்ணக்கல் அகழ்வுக்கு சாதகமான இடம்தான் என்பதை பறைசாற்றுகின்றது. அனால் தற்போது சுயநல அரசியல் செயற்பாடுகளே இதை தடுக்கின்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இத்திட்டத்தை கையிலெடுத்து குறித்த பிரதேசத்தையும் மக்களையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பிவிட்டால் தமது அரசியல் இருப்பு காலியாகிவிடும் என்ற அச்சமே இத்தகைய தரப்பினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தியையும் தடுத்துநிறுத்த முயற்சிக்கின்றனர்.

இதேவேளை குறித்த தினத்தன்று பொன்னாவெளி கிராமத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பொதுமக்கள் முன்னிலையில் கனியவள மற்றும் சுற்றுச்சூழல் திணைக்களங்களின் அதிகாரிகளால் அளவீட்டு பணிகளே மேற்கொள் திட்டமிடப்பட்டிருந்தது

அந்த ஆய்வினூடாக அதிகாரிகள் கூறும் கருத்துக்களை மக்கள் வெளிப்படையாக அறிந்துகொண்டு தமது கருத்துக்களையும் வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது

குறித்த ஆய்வில் சாதகமான பதில் கிடைத்தால் குறித்த திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதென்றும் இல்லை பாதகமான பதில் கிடைத்திருந்தால் அதை கைவிடுவ தென்றுமே எமது நிலைப்பாடக இருந்தது.

இந்நிலையில் உண்மையை அறியாது, விசமிகளின் தூண்டலுக்கு ஏடுபட்டவர்களையும் , போதைப்பொருள் பாவனையாளர்களையும் ஏவிவிட்டு சிலர் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நலன்களுக்கு துரோகம் செய்துள்ளனர்..

பொன்னாவெளியில்  இயற்கை வளமான சுன்னக்கல்லை பயன்படுத்தினால் அது மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறான நல்ல திட்டங்களும், மக்களுக்கு பொருளாதார உயர்வும் கிடைத்துவிடக்கூடாது. என்று கருதி மக்களை தொடர்ந்து கையேந்திகளாக துயரத்தில் வைத்திருப்பதன் ஊடாகவே தமது சுயலாப அரசியலை முன்னெடுக்க முடியும் என்று செயற்படும் மக்கள் விரோதிகளே இந்த குழப்பத்தின் பின்னால் மறை கரமாக இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: