அரசியல் சக்திகள் தங்களால் இயன்ற அனைத்தையும் திருடிவிட்டன – அமைச்சர் வஜிர அபேவர்தன!

Tuesday, September 10th, 2019

களவாட முடிந்தால் நம் நாட்டின் இலவச கல்வியின் தந்தைடு என்ற வார்த்தையை கூட திருடுவார்கள் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற செயற்றிட்டத்திற்கு அமைய காலி மஹிந்த கல்லூரியில் 310 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், டுசி.டப்ள்யூ.டப்ள்யூ கன்னங்கர இலவச கல்வி குறித்து வெளிப்படுத்திய கருத்துக்களை அரச சபையில் காண முடியும்.

எனவே இலவச கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கராவின் உருவ சிலையை காலி முகத்திடலில் அமைக்க வேண்டும் என அப்போது எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து நான் கூறினேன். இதனை கோபத்தில் கூறவில்லை. இந்த நாட்டின் அரசியல் சக்திகள் தங்களால் இயன்ற அனைத்தையும் திருடிவிட்டன. திருட முடியாத ஒன்று கல்வியாகும்.

கண்ணங்கர கொடையாக வழங்கிய இலவச கல்வி துறையை தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்ல எண்ணியுள்ளார்.

அவர் போட்டிமிகு பரீட்சை முறைமையை செயற்படுத்துவார். விஞ்ஞான ஆய்வு கூடங்களை அமைப்பார் அதேபோல் தொழிநுட்ப பிரிவுகளையும் ஆரம்பிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: