சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் ஐவர் கைது!
Monday, May 26th, 2025
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் ஐவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி ஏழு மாடுகளை வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றபோது காரைநகர் பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரனவின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
வைத்தியர்கள் இன்மையால் மாணவி பரிதாபமாக பலி..!
வடக்கில் நான்கு சபைகள் 20 ஆம் திகதி ஆரம்பம்!
யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் - நகர அபிவிருத்தி அதிகார ச...
|
|
|


