யாழ். நாவற்குழி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே வாள் வெட்டு தாக்குதல் – இருவர் காயம்!
Tuesday, December 7th, 2021
யாழ். நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள் வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற வாள் வெட்டுத் தாக்குதல்லில் 2 பேர் காயமடைந்துள்ளதாக அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
இதன் போது 20, 21 வயது இளைஞர்கள் இருவரே காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பங்குனி மாதத்தை இருண்ட மாதமாக பிரகடனப்படுத்த வேண்டும்!
மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கை பயனுறுதியைப் பெற கொக்க கோலா நிறுவனம் விரும்பம் தெரிவிப்பு!
வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் பூரண ஆதரவு - இலங்கைக்...
|
|
|


