மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கை பயனுறுதியைப் பெற கொக்க கோலா நிறுவனம் விரும்பம் தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2017

தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கையை தெரிவு நிலைக்குட்படுத்த, அமெரிக்காவின் கொக கோலா நிறுவனம், தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இது குறித்து கோக கோலா நிறுவனத்தின், ஆசிய பசுபிக் பிரிவுக்கான உதவித் தலைவர், ஜோன் முர்பி, இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து இது தொடர்பாகப் பேசியுள்ளதுடன் தெற்காசியாவில் அதிக சந்தைவாய்ப்பைக் கொண்டுள்ள தங்களது உற்பத்தி மையம் ஒன்றை, ஆரம்பிப்பதற்கும், இங்கிருந்து இந்தியாவுக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக கோலா நிறுவனமானது பல்வேறு வகையான மென்பான தயாரிப்புக்களை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சந்தைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தவிர முதலீட்டுக்கான வரிவிதிப்பின் உறுதித்தன்மை தொடர்பில் கருத்துரைக்கப்பட்டுள்ளதுடன் தற்போதைய நிலையில் இலங்கையிலிருந்து ஒரே ஒரு நிறுவனமே, பழச்சாறுகளைப் பொதியில் அடைத்து இந்தியாவுக்கு ஏற்றுமதிச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்தியாவில் கோகா கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், முக்கிய குடிநீர் ஆதாரங்களைச் சுரண்டி வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த நிறுவனம் தமது உற்பத்திகளுக்கான  கேந்திர நிலையமாக இலங்கையைத் தெரிவு நிலைக்குட்படுத்தத் திட்டமிட்டுள்ளதான கருத்து தெரிவிக்கப்படுகிறது.

01-1380613603-01-1380605338-cocacola

Related posts: