பாதிப்புகளில் இருந்து மீளுவதற்கு கைகொக்கத் தயாராகும் வெளியுறவு அமைச்சு !

Sunday, June 14th, 2020

கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீளுவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறித்த அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 277 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட ஏற்றுமதிகள் கடந்த மே மாதம் 606 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில் இதனை மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த காலப்பகுதியில் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறிப்பாக சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் சார்ந்த சந்தை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச ரீதியில் சரக்கு விமானங்களை தொடர்ச்சியாக இயக்கி வரும் விமான சேவைகளில் ஸ்ரீ லங்கன் விமான சேவையும் ஒன்றாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: