கையடக்க தொலைபேசிகளை பதிவு – வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவு – தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு!
Wednesday, January 8th, 2025
கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தங்களது ஆணைக்குழுவில் IMEI இலக்கத்தைப் பதிவு செய்யாத கைத்தொலைபேசிகளில் குறித்த கால அவகாசத்தின் பின்னர் தொலைபேசி வலையமைப்பு இயங்காது என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் IMEI இலக்கத்தைப் பதிவு செய்தவர்களுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது எனவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஸ்டார் லிங்க் சேவைக்கு உரித்தான தொலைத்தொடர்பு பொதிகளுக்கான கட்டணங்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா விமரிசை!
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு நாடாளுமன்ற விசேட குழு – சபாநாயகரிடம் பெண...
புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால் தேவை...
|
|
|


