ஒக்டோபர் 9 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, July 20th, 2020

2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோர்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அசச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் தரம் ஐந்து புலமைப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கும் கல்வி அமைச்சு திட்டமிடுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை அடுத்த திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஏனயை தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஆகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

ஒக்டோபர் 09 ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மூடப்பட்டு, பின்னர் நவம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்’துள்ளது.

முன்பதாக இவ்வருடம் மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் நாட்டிலேற்றபட்ட கொரோனா தொற்றின் அச்ச நிலை காரணமாக நாடு முடக்கப்பட்டது. இதனால் பாடசாலை நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தையும் நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் கட்டியெழுப்புவதே ...
எதிர்வரும் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி வெளியாகும் - தேர்தல்...
குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவிப்பு!