கட்சியின் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் இளைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!
Monday, March 17th, 2025
மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதற்கான உத்வேகத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இருக்கின்றது என்ற செய்தியை நெடுந்தீவு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்ட செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் இளைய தலைமுறையினர் மத்தியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நெடுந்தீவு பிரதேச சபைக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுடனான சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
இதேநேரம் 1991 ஆம் ஆண்டு அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் உண்ண உணவின்றி பசியுடன் இருந்த மக்களின் அழைப்பை ஏற்று, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நெடுந்தீவில் கால் பதித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அந்தப் பிரதேசத்தினை மீளகட்டியழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த...
மக்களின் எதிர்பார்ப்புக்ளை நிறைவேற்றும் பயணம் தொடரும் - புகையிரத பயணம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரு...
இலங்கை கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தி...
|
|
|


