ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நேற்று (24) ஜெனீவாவில் ஆரம்பமானது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது அமர்வு இதுவாகும்.
இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இன்று (25) ஜெனீவா நேரப்படி பி.ப 3.40 மணிக்கு உரையாற்றினார்.
அமர்விற்கு இணைவாக அரச இராஜதந்திரிகள் பலருடனும் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
கடந்த அமர்வின் போது முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பை தெரிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அதற்கென அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நிதியமைச்சர் சீனா பயணம்!
பிணைமுறி தொடர்பான விசாரணையில் மோதல்கள்!
அரச நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்ப...
|
|