ஏப்ரல் 27  – தென்மராட்சி கல்வி வலயஇடைநிலைப் பிரிவு மாணவர்களுக்குரிய  ஆங்கில மொழி நாடகப் போட்டி!

Friday, April 24th, 2026



…..

இடைநிலைப்பிரிவு மாணவர்களுக்குரிய தென்மராட்சி கல்வி வலய 2026 ம் ஆண்டுக்கான ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியின் பிரிவு நிலை  ஒன்றுக்குரிய வாய்மொழி நிகழ்வுகள் ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு  யாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளன.


இந்த நிகழ்வின் போட்டிப் பணிப்பாளராக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் மற்றும் இருமொழிக் கல்வி)  பி.என். சுதர்சன் செயல்படுகிறார்.


மேலும், இந்நிகழ்விற்கு கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சபை திறைசேரியின்

வருவாய்ப் பகுதிக்கான

பிரதம கணக்காளர்  கே. எஸ். கஜேந்திரன்  

அவர்கள் கலந்து கொ‌ள்கின்றார்.


மாணவர்களின் ஆங்கிலத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்  அனைவரும் இதில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர்

Related posts: