ஊர்காவற்துறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு!
Thursday, October 24th, 2024
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை.
ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று காலை நடத்தப்பட்ட சோதனையின்போது வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வீட்டில் வசித்த சந்தேக நபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
000
Related posts:
இரண்டு தசாப்தத்தின் பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்!
10 எண்ணெய் களஞ்சியங்கள் இலங்கைக்கு!
வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி அறுப்பு – வட்டு.கண்ணகை அம்மன் கோயிலடியில் சம்பவம்!
|
|
|


