நெற்செய்கை காணிகள் பதிவு ஆரம்பம்!

Tuesday, December 6th, 2016

நெற்பயிர்ச்செய்கைக் காணிகள் பெரும்பாக கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் குத்தகைக்கு பயிர் செய்வோர் தமது பகுதி பெரும்பாக கமநல சேவை நிலையங்களில் காணிகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெற்காணிகளைப் பதிவு செய்யும் விண்ணப்பபடிவங்கள் பெரும்பாக கமநல சேவை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோர் மற்றும் குத்தகைக்கு பயிர் செய்வோர் அந்தப் படிவத்தைப் பெற்று முழுமைப்படுத்தி விவசாய சம்மேளனங்கள் அல்லது கிராம மட்ட விவசாய அமைப்புக்களின் அத்தாட்சிப்படுத்தலுடன் நெற்பயிர்ச்செய்கை காணி பரப்பளவு அடிப்படையிலான பதிவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் நெற்பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் மானிய உதவிகள் மற்றும் கொடுப்பனவுகள் பதிவு செய்யப்பட்ட பரப்பளவு அடிப்படையில் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

الارز-720x480

Related posts: