உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைபுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் – யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்து!

Thursday, May 14th, 2026


……
யாழ் மாநகரின் ஆளுகைக்குள் இருக்கும் உணவகங்களின் உணவுத்தரம் உணவில் இணைக்கப்படும் பொருட்களின் அளவுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுடன் விலை அதிகரிப்பு மற்றும் அதன் பின்னரான உணவு பொதிகளின் அளவையும் அவதானத்தில் கொள்ளவது அவசியம் என யாழ் மாநகரின் உறுப்பினர் றீகன் இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில் குறித்த விடையம் தொடர்பில் முன்மொழிவை சபையில் சமர்ப்பித்த றீகன் மேலும் கூறுகையில் –

தற்போது அளவு கடந்த விலைகளில் ஒவ்வொரு உணவகங்களிலும் உணவுகள் விற்கப்படுகின்றன.

விலையை மட்டும் உடனடியாக உயர்த்தியவர்கள் தரம் மற்று அளவுகளில் அக்கறை காட்டாது இருக்கின்றனர்.

குறிப்பாக கொத்துரொட்டி முட்டை ரொட்டி, பிரைட்ரைஸ் போன்ற  உணவுகளில் உள்ளிடப்படும் இறைச்சி மற்றும் கடலுணவுகளின் அளவு மிகக் குறைவாகவே இருக்கின்றது.

விலையை உயர்த்தும் உரிமையாளர்கள் உணவின் தரத்தையும் அதன் உள்ளீடுகளின் அளவுகளையும் ஏன் கண்டு கொள்ளாதுள்ளனர் என்ற கேள்வி அனைவரிடமும் எழுகின்றது

அது மட்டுமல்லாது ஒவ்வொரு உணவகங்களில் ஒவ்வொரு விலைகளிலும் உணவுகள் விற்பனையாகின்றது.

இதை யாழ் மாநகரசபை கட்டுப்படுத்தி மக்களின் நலன் கருதி விலை மற்றும் தரம் ஆகியவற்றை ஒரே சீராக வழங்கும் பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

இதற்கு யாழ் மாநகர சபை உடன் நடவடிகை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறித்த பிரேரணை சபையின் உறுப்பினர்களது விவாதத்துக்கு விடப்பட்ட நிலையில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக விலைக் கண்காணிப்பு மற்றும் உணவின் அளவு  கண்காணிக்கப்படுவது அவசியமானது.

அதுமட்டுமல்லாது ஒவ்வொரு கடைகளும் ஒவ்வொரு அரிசி மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்துவதால் விலையில் ஏற்ற தாழ்வுகள் உக்கத்தான் செய்யும்.

ஆனாலும் கடைகளின் தரங்களுக்கேற்ற வகையில் விலைகளிலும் உணவின் தரத்திலும் மாற்றங்கள் இருக்கும். இதை எவ்வாறு கையாள்வது என்ற பொறிமுறை ஒன்றும் வகுக்கப்படுவது அவசியமாகும் என்று வலியுறுத்தப்பட்டது.

இன்னிலையில் குறித்த விடையம் உணவுக்கட்டுப்பாடு மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: