800 வது கோடி குழந்தை மணிலாவில் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல்!

Thursday, November 17th, 2022

உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளநிலையில் 800 ஆவது கோடி குழந்தை குறித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இதன்படி 800 வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிலா அருகேயுள்ள டாண்டோ என்னும் கிராமத்தில் 800 வது கோடி குழந்தை பிறந்தது. பெண் குழந்தையான இதற்கு Vinis Mabansag என பெயர் சூட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை பிலிப்பைன்ஸ் மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கொண்டாடி வரும் நிலையில், அந்த குழந்தை மற்றும் தாயின் புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


போர் அச்சத்தில் இருந்து விடுபட்ட வடக்கை போதைப் பொருள் பயன்பாடு பற்றியுள்ளது - ஜனாதிபதி மைத்திரிபால ச...
கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்யுமாறு நிபுணர் குழு பரிந்துரை - சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிய...
வழமை நிலைக்கு திரும்பியது மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவை– அதிக பயணிகளை ஏற்றிச் செ...