ஈரானின் எண்ணெய் வர்த்தகக் கப்பல்களுக்குப் பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா!
Saturday, October 12th, 2024
ஈரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் அது சார்ந்த கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தப் பொருளாதாரத் தடை அறிவிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தெஹ்ரானிஸ் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, பெய்ரூட்டில் ஹெஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரான் இராணுவத் தளபதி ஆகியோர் கொல்லப்பட்டமைக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்தநிலையில் ஈரானின் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் புதிய பொருளாதாரத் தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் எண்டனி பிளிங்கன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
000
Related posts:
கொடுத்துவைத்தவர்கள் சுவிஸ் ஆண்கள்!
ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பான விசாரணை: துருக்கியில் 40 படையினர் கைது!
உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!
|
|
|


