கொடுத்துவைத்தவர்கள் சுவிஸ் ஆண்கள்!

Friday, May 20th, 2016
உலகில் மிக அதிக வாழ்நாள் கொண்டவர்கள் சுவிஸ் ஆண்கள் என்று உலக பொது சுகாதார புள்ளியியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால் சுவிஸ் பெண்களின் ஆயுட்காலம் உலகின் எஞ்சிய நாடுகளைவிட குறைந்துள்ளதாகவும், இது இரண்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

ஆயுட்காலம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை கடந்த புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் முதலிடத்தில் இருந்த ஐஸ்லாந்து நாட்டவரை பின்னுக்கு தள்ளி சுவிஸ் முதலிடத்தில் வந்துள்ளது.

சுவிஸ் நாட்டில் பிறக்கும் ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக 81.3 ஆண்டுகள் எனவும், ஆனால் ஒட்டுமொத்த உலக ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 69.1 ஆண்டுகள் ஆகும்.

சுவிஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 85.3 ஆண்டுகள் என குறிப்பிடும் அந்த ஆய்வறிக்கை, இது கடந்த 2012 ஆம் ஆண்டு 85 வயது என இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

சுவிஸ் நாட்டில் பிறந்த பெண்களை விடவும் சிங்கப்பூர்,தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டவர்கள் அதிக ஆயுட்காலம் கொண்டவர்கள் என புதிய அறிக்கை கூறுகின்றது.

மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையின்படி உலகின் அதிக வருவாய் ஈட்டக்கூடிய 29 நாடுகளில் பிறக்கும் மக்களின் ஆயுட்காலம் சராசரியாக 80 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் எனவும் ஏழ்மையால் அவதிப்படும் ஆப்பிரிக்கா நாடுகளில் பிறப்பவர்களின் சராசரி ஆயுட்காலம் 60 ஆண்டுகள் எனவும் கூறப்படுகிறது.

தடுக்கக்கூடிய மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் உருவாக்க கூடிய தேவையற்ற துன்பம் மற்றும் அகால மரணங்களை பெருவாரியாக குறைத்து உலகம் பலபடி முன்னேறியுள்ளது.

இதனால் ஒட்டுமொத்தமாக உலக மக்களின் ஆயுட்காலம் கடந்த 2000ல் இருந்து 2015 வரையான காலகட்டத்தில் 5 ஆண்டுகள் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

Related posts: