இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு !
Monday, June 9th, 2025
இந்த வருடத்தின் நேற்றையதினம் வரை 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், டெங்கு நோயினால் 13 பேர் உயிரிழந்ததாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நிலவிய மழையுடனான காலநிலையை அடுத்து நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயினால் 25 சதவீதமான, மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், காய்ச்சல், வாந்திபேதி ஏற்படுமிடத்து வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில், டெங்கு பெருக்கம் உள்ள இடங்களைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு, உரியப் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


