5 ஆயிரம் புசல் விதை நெல்லை கொள்வனவு செய்யத் திட்டம்!

Monday, May 28th, 2018

யாழ் மாவட்ட விதை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் சிக்கோ இந்த ஆண்டு பெரும்போக நெற்செய்கைக்கான விதை நெல்லை விவசாயிகளுக்கு விநியோகிக்கவுள்ளது.

இவ்விதை நெல் குறிப்பாக எதிர்வரும் ஜீன் மாத இறுதிக்குள் விநியோகித்து வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொது முகாமையாளர் ரவி மயூரன் தெரிவித்தார். பிஜி 406 இனத்தைச் சேர்ந்த 2500 வரையிலான புசல் விதை நெல் இதுவரைக்கும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

சங்கம் மொத்தமாக 5 ஆயிரம் புசல் விதை நெல் வகையை கொள்வனவு செய்யவும் திட்டமிட்டுள்ளன. கொள்வனவு செய்யப்படும் விதை நெல் தரமான முளைதிறன் கூடிய நெல் என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஆராச்சிக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டில் கால போக நெற்செய்கைக்காக சிக்கோ சுமார் 5 ஆயிரம் வரையிலான விதை நெல்லை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு வழங்கியது போன்று இந்த ஆண்டிலும் புசல் விதை நெல்லை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு வழங்கி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: